Posts

Showing posts from January, 2012
என் இதயக்கதவை தட்டி உள்ளே வரலாமா என்று கேட்கும் என் உயிரே ! நான் காணும் உலகம் நீயாக இருக்க என் உயிரே உனதானபின் ஏன் இந்த தயக்கம்? உன் பார்வை என்மேல் பூமழையாய் பொழிய உன் உதடுகள் என் பெயரை இனிதாக உச்சரிக்க, உன் மனம் எனக்காக ஏங்கி காத்திருக்க கானுமிடமெல்லாம் எனக்கு நீயாக உனக்கு நானாக காட்சியளிக்கும் மாயமென்ன ! உனக்குள் நான் எனக்குள் நீ இருக்கும்போது எதற்காக ஏக்கம் தேடல் ,காத்திருத்தல் ஏமாற்றமெல்லாம்? நான் நீயாகிறேன், நீ நானாகிறாய் நாம் ஈருடலில் இருக்கும் ஓருயிர் ஆகிறோம் , இப்படிக்கு என் அன்பாகிய நீ :) உன் அன்பாகிய நான் :) உஷா
இன்று எனது இதயம் இனிமையாக அடித்துகொண்டிருக்கிறது எதனால் இந்த இனிமை ? இனிமையான என் தோழன் தானே முன்வந்து எனை அழைத்தான் அழகான கவிதைகள் ஆயிரம் என் காதில் கிசுகிசுத்தான் ! அன்பாய் என்னை அவன் வார்த்தைகளால் அரவணைத்தான். வாழும் எண்னம் வந்தது அவன் அழைக்கையில் :) சாகும் எண்னம் வந்தது அவன் பேச்சை முடிக்கையில் :( என் வாழ்வும் சாவும் அவன் குரலில் கைதுசெய்யபட்டுவிட்டது ! என் வாழ்கையின் பொருளாய் இனி அவன் இருப்பான் :) என் இதயம் என்றும் இனி அவன் இதயத்துடன் சங்கமம் :) உஷா