என் இதயக்கதவை தட்டி உள்ளே வரலாமா
என்று கேட்கும் என் உயிரே !
நான் காணும் உலகம் நீயாக இருக்க
என் உயிரே உனதானபின் ஏன் இந்த தயக்கம்?
உன் பார்வை என்மேல் பூமழையாய் பொழிய
உன் உதடுகள் என் பெயரை இனிதாக உச்சரிக்க,
உன் மனம் எனக்காக ஏங்கி காத்திருக்க
கானுமிடமெல்லாம் எனக்கு நீயாக உனக்கு நானாக
காட்சியளிக்கும் மாயமென்ன !
உனக்குள் நான் எனக்குள் நீ இருக்கும்போது
எதற்காக ஏக்கம் தேடல் ,காத்திருத்தல் ஏமாற்றமெல்லாம்?
நான் நீயாகிறேன், நீ நானாகிறாய்
நாம் ஈருடலில் இருக்கும் ஓருயிர் ஆகிறோம் ,
இப்படிக்கு என் அன்பாகிய நீ :)
உன் அன்பாகிய நான் :)
உஷா

Popular posts from this blog

a touching heart